கொரோனாவில் இருந்து தற்காத்துக்கொள்ளும் வழிகள்

கொரோனா வர தொடங்கிய பிறகு சிறு காய்ச்சல் என்றாலே அனைவரும் அச்சப்படுகிறோம் அனால் காய்ச்சல், சளி, இருமல், தொண்டை கரகரப்பு ,உடல் வலி போன்றவற்றை நம்மால் வீட்டிலேயே எளிய முறையில் சரிசெய்ய முடியும். மேலும் கொரோனாவில் இருந்து நம்மை தற்காத்துக்கொள்ளும் சில குறிப்புகளை இங்கு நாம் காண்போம். இந்த எளிமையான மருத்துவ குறிப்புகள் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

கொரோனா கஷாயம்

“ வறுமுன் காத்தல்; வந்தபின் குணமாக்குதல் “

இந்த கஷாயத்தை அனைத்துவகையான வைரஸ் காய்ச்சலுக்கும் பயன்படுத்தலாம். இதை செய்வதற்கான மூலப்பொருட்கள் மஞ்சள் தூள், கிராம்பு, எலுமிச்சை,மற்றும் எஞ்சி.
இதன் செய்முறை -1 லிட்டர் தண்ணீரில் 1 மேஜைக்கரண்டி மஞ்சள் தூள், 2 கிராம்பு, 1 எலுமிச்சை, 1 துண்டு எஞ்சி சேர்க்கவும், இவை அனைத்தையும் பாதி ஆகும் வரை கொதிக்க விடவும். பின்னர் அதை வடிகட்டி பருகவும்.

குறிப்பு : கொரோனா பாதிக்கப்பட்டு 24 மணிநேரத்தில் பூரண குணமானதும் ஆங்கில மருத்துவரை பரிந்துரைக்கவும்

உடலில் ஆக்சிஜன் அளவை அதிகரிக்க

  • அரை டம்ளர் தேங்காய் பாலில் அரை மேஜைக்கரண்டி கடுக்காய் தூள் கலந்து காலை மாலை குடித்து வர உடலில் ஆக்சிஜன் அளவு அதிகரிக்கும் அதேபோல் கிராம்பு தூள் கலந்து அருந்தலாம்.
  • ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க விடவும். பின்னர் அந்த நீரில் நன்றாக ஆவி பிடிக்க வேண்டும். இதை தினமும் ஒரு முறை பின்பற்றினால் தொண்டை சுவாச குழாயில் இருக்கும் கிருமிகள் அழிந்துவிடும்.

மேலும் சில குறிப்புகள்

  • நாம் அனைவருக்கும்  சுலபமாக கிடைக்க கூடிய இஞ்சி, எலுமிச்சை ஆகியவற்றை சிறு துண்டுகளாக நறுக்கி, ஒரு சிட்டிகை மஞ்சள் சேர்த்து தண்ணீரில் நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி தினமும் காலை, மாலை, இரவு என குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
  • காலை வெறும் வயிற்றில் கபசுர குடீநீர் குடிக்க வேண்டும். இது அனைத்து நாட்டு மருந்து கடைகளில் சுலபமாக கிடைக்கும்.
  • தொண்டை கரகரப்பு நீங்க சுடு தண்ணீரில் சிறிதளவு உப்பு மட்டும் மஞ்சள் கலந்து கொப்பளிக்க வேண்டும். உடலில் நீர் சத்து மிகவும் அவசியம். அதனால் 8-10 டம்ளர் தண்ணீர் பருக வேண்டும்.
  • மஞ்சள் கலந்த பாலை தினமும் இரண்டு முறை குடிப்பது நல்லது.
  • அதிகமாக வைட்டமின் சி மற்றும் வைட்டமின் டி உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். பருப்பு, காய்கறி ,பழம் , கீரை , முட்டை தினமும் சாப்பிட வேண்டும்.
  • கொரோனா அறிகுறி உள்ளவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் மற்றும் அவர்கள் பயன்படுத்திய பொருள்களை மற்றவர்கள் பயன்படுத்த கூடாது.
  • வீட்டில் உள்ளவர்கள் முகக்கவசம் அணிவது சிறந்தது. வெளிய சென்று வீட்டிற்கு வருபவர்கள் கை, கால் அனைத்தும் சோப்பு போட்டு சுத்தம் செய்ய வேண்டும். இவ்வாறு மேற்கண்ட குறிப்புகளை கடைப்பிடித்தால் கொரோனா பரவாமல் தவிர்க்கலாம் மற்றும் வீட்டில் தனிமை படுத்திக்கொள்பவர்கள் இந்த குறிப்புகளை பின்பற்றுவதனால் நல்ல பலன் காணலாம்.

இதைப்போன்ற மேலும் பயனுள்ள செய்திகளை பற்றி அறிய https://lyfedy.com/. மேலும் இதைப்பற்றி அறிய https://youtu.be/gIip35x2_jo.