உடற்பயிற்சி இன்றி எளிதில் வீட்டிலேயே உடம்பை குறைப்பது எப்படி

உடற்பயிற்சி இல்லாமல் உணவு கட்டுப்பாடு இல்லாமல் உடம்பை குறைப்பது எல்லா மனிதரின் கனவு ஆனால் இவையன்றி உடல் பருமனை குறைத்தல் பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பது அனைவரின் எண்ணம். ஆனால் பின்விளைவுகள் இல்லாமல் எளிமையான வழியில் உடம்பை குறைக்க பல வழிகள் உண்டு.இங்கு வீட்டிலேயே எளிதில் உடல் பருமனை குறைப்பதற்கான வழிமுறைகளை நாம் காண்போம்.

1 .மூலிகை பானம்

இதை செய்வதற்கான முக்கிய பொருட்கள் சின்ன வெங்காயம் ,எலுமிச்சை ,முருங்கை இலை ,மற்றும் தேன். இப்பொழுது இதை செய்வதற்கான வழிமுறைகளை காண்போம் ,முதலில் சின்ன வெங்காயத்தின் சாறு மற்றும் முருங்கை இலை சாற்றை தலா ஒரு தேக்கரண்டி எடுத்துக்கொள்ளவும். இவற்றுடன் ஒரு எலுமிச்சை சாற்றை சேர்க்கவும் பின்பு நன்கு கலந்த கலவையில் இறுதியாக தேன் சேர்த்து பருகவும். இந்த மூலிகை பானத்தை தினமும் உணவிற்கு ஒரு மணி நேரம் முன்பு பருகிவந்தால் ஒரு மாதத்தில் ஐந்தில் இருந்து எட்டு கிலோவாரை எடையை குறைக்கலாம். இதில் பயன்படுத்தும் அனைத்து பொருட்களும் மூலிகை என்பதால் பின்விளைவுகள் ஏதும் ஏற்படாது.

2.கொழுப்பை கரைக்கும் தேநீர்

மக்கள் கொழுப்பை குறைக்க பல வழிகளை பின்பற்றுகிறார்கள். உடல் பருமன் நம் அழகை குறைக்கும். இந்த காலத்தில் உடல் பயிற்சி செய்வதற்கு நேரம் இல்லை அதனால் வீட்டிலேயே எளிதில் உடல் பருமனை குறைக்கும் தேனீரை எப்படி செய்வது என்று இங்கு நாம் காண்போம். இதை செய்ய முதலில் மூன்று கோப்பை தண்ணீருடன் ஒரு தேக்கரண்டி கருஞ்சீரகம் ,ஒரு தேக்கரண்டி பச்சை தேயிலை இலைகள் ,ஒரு தேக்கரண்டி புதினா சாறு மற்றும் இஞ்சி விழுது சேர்த்து மிதமான சூட்டில் கொதிக்க வைக்கவும். ஆரிய பிறகு எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து பருகவும். இந்த தேனீர் உடல் பருமனை குறைக்க மிகவும் பயனுள்ளது.

3.பட்டை தேனீர்

உடல் எடையை குறைக்கும் கடைசி குறிப்பு பட்டை தேனீர். இதை செய்வதற்க்கான மூலப்பொருட்கள் பூண்டு ,இஞ்சி ,பட்டை ,எலுமிச்சை மற்றும் தேன். முதலில் இரண்டு பல் பூண்டு மற்றும் சிறிதளவு இஞ்சியை விழுதாக்கவும். ஒரு பாத்திரத்தில் இரண்டு கோப்பை தண்ணீருடன் இந்த விழுதை சேர்த்து அதனுடன் இரண்டு பட்டை சேர்த்து தண்ணீர் பாதியாகும்வரை மிதமான தீயில் கொதிக்கவைக்கவும். ஆரிய பிறகு எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து பருகவும். இதிலிருக்கும் பட்டை உடலின் இரத்த ஓட்டத்தை சீர்செய்து உடல் எடையை குறைக்க உதவுகிறது.

இந்த குறிப்புகளுடன் சேர்த்து சீரான உணவுமுறை மற்றும் உடற்பயிற்சியை கடைப்புடித்தால் வேகமாக எடையை குறைக்கலாம். உடல் பருமனை குறைப்பதால் பலவிதமான நோய்களில் இருந்து நம்மை காத்துக்கொள்ள முடியும். உடல் எடையை குறைப்பதால் இரத்த அழுத்தம் ,இருதய நோய் மற்றும் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தலாம்.

இதைப்போன்ற மேலும் பயனுள்ள செய்திகளை பற்றி அறிய https://lyfedy.com/. மேலும் இதைப்பற்றி அறிய https://youtu.be/gIip35x2_jo