நீங்கள் அன்றாடம் உபயோகித்து வந்த செயலிகளுக்கு தடையா?கவலை வேண்டாம்!
59 சீன செயலிகளுக்கு தடை விதித்து, இந்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஓர் உத்தரவை வெளியிட்டுள்ளது.இந்தியா சீனா இடையே உள்ள முரண்பாடுகளாலும்,சில பயன்பாடுகளை தவறாகப் பயன்படுத்துவது பற்றிய பல அறிக்கைகள் உட்பட பல்வேறு ஆதாரங்களில் இருந்து பல புகார்களைப் பெற்றுள்ளதாலும் பயனர்களின் தரவை அங்கீகரிக்கப்படாத முறையில் இந்தியாவிற்கு வெளியே உள்ள இருப்பிடங்களைக் கொண்ட சேவையகங்களுக்கு திருடி மறைத்து அனுப்பியதாலும் தான் இந்த அதிரடி முடிவு.
பல தரப்பினர் அத்தியாவசியமாக பயன்படுத்திக் கொண்டிருந்த TikTok, UC Browser, file sharing app ShareIt, CamScanner போன்றவற்றின் தடையால் தான் இப்போது அனைவருக்கும் அதிருப்தி.
கையில் வெண்ணெய் இருக்க நெய்க்கு அலைவானேன்? நாம் இதுவரை கண்டிராத பல நல்ல அம்சங்களுடன் உள்ள செயலிகளே நம் கேள்விக்கான பதில்.இந்திய செயலிகளும் அதில் அடங்கும் என்பதே பெருமைக்குரியது!
1.Tiktok, Likee,Kwai, Vigo,Vmate, Buigo இந்த செயலிகளுக்கு மாறாக Triller, Dubsmash,MadLipz
Roposo,Injoy,Chingari-இந்தியச் செயலிகள்
பொதுவாக WhatsApp செயலியில் ஸ்டேட்டஸ் வைப்பதற்கும்,நடிகர்களுடன் டூயட் போடுவதற்கும் பேர்போன TikTok ,சிறார்களின் தனியுரிமையைப் பாதுகாக்க தவறிவிட்டது.
ஆனால் Triller என்னும் செயலியில் தேவையற்ற அனுமதிகள் கேட்க படுவதில்லை, இசை வீடியோக்களை உருவாக்கலாம், பல பாடல்கள் உள்ளன இது போன்று அற்புதங்கள் நிறைந்துள்ளன.
2.CamScanner செயலிக்கு பதில் Abode Scan, Microsoft office lens,Doc Scanner PDF creator,Scanner in Google drive
பொதுவாக பள்ளி,கல்லூரி மாணவர்கள் முதல் அலுவலர்கள் வரை அனைவரும் உபயோகித்த CamScanner ஏற்கனவே ஒரு முறை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து அகற்றப்பட்டது.இப்போது தீங்களிக்கும் மென்பொருள் இதில் உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
Abode Scan மூலம் அடையாள அட்டை போன்ற பல அதிகாரப்பூர்வ ஆவணங்களை ஸ்கேன் செய்யலாம் மற்றும் OCR சிறப்பம்சமும் உள்ளது.
3.Shareit,Xender,ShareMe(MiDrop), Share all file transfer,Zapya and Zapya Go file transfer இவற்றுக்கு பதிலாக Files by Google,Fx File explorer,Snapdrop.
ஷேர்இட் கடந்த ஆண்டு இரண்டு பாதுகாப்பு பாதிப்புகளுடன் கண்டறியப்பட்டது,பலர் இதன் அதிவேக பரிமாற்றங்களை கண்டு ஏமாற்றப்பட்டுள்ளனர். இது சாதன அங்கீகார பொறிமுறையைத் தவிர்ப்பதன் மூலம் பயனரின் சாதனத்திலிருந்து உள்ளடக்கத்தைப் பதிவிறக்குவதற்கு தாக்குபவர்களை அனுமதித்தது.
ஆனால் Files by Google என்பது எளிய, சிறந்த மற்றும் பாதுகாப்பான செயலியாகும்.SnapDrop கோப்புகளை கணினியிலிருந்து மொபைலுக்கு மாற்றுகிறது, இது ஒரு செயலி அல்ல, இணைய அடிப்படையிலான தளம்.Android/iOS இரண்டிற்கும் பொருந்தும்.
4.UC browser,CM browser,APUS browser,DU browser ,Dolphin browser இவைக்கு பதிலாக Google Chrome,Jio Browser,Epic Browser.
பயன்பாட்டில் உள்ள பாதுகாப்பு பாதிப்புகள் மற்றும் தனியுரிமை இடைவெளிகள் கருதி UC browser தடை செய்யப்பட்டது.
எல்லா கைபேசி மற்றும் கணினிகளிலும் Google Chrome உள்ளடக்கியவை என்பது குறிப்பிடத்தக்கது.
Firefox என்ற செயலி தனியுரிமையில் சிறந்தது, டிராக்கர்களை தானாகவே தடுக்கிறது,நொடிகளில் தகவல் அறியலாம்.
Epic browser யில் வீடியோக்களை பதிவிறக்கம் செய்யலாம்,விளம்பரங்கள் இல்லை,VPN வசதி.
5.VivaVideo,YouCut,VideoShow,VivaCut போன்ற செயலிகளை நீக்கி Kinemaster ,InShot ,FilmoraGo ,Quik video editor பதிவிறக்கம் செய்யலாம்
உறவினர் மற்றும் நண்பர்களின் புகைப்படங்களை தொகுத்து காணொலியாக மாற்ற அனைவரும் உபயோகித்த VivaVideo இந்திய பயனர்களை உளவு பார்த்ததற்காக இந்திய அரசாங்கமே 2017 ஆம் ஆண்டில் இந்த பயன்பாட்டை தடுத்திருந்தது.
பல நிலை காலவரிசை, வீடியோ, படம், உரை மற்றும் ஆடியோவுக்கான ஆதரவு, மற்றும் டிரிம், வெட்டு, துல்லியமான ஆடியோ கட்டுப்பாடுகள், வண்ண LUT வடிப்பான்கள் மற்றும் பல இது போன்ற துல்லியமான எடிட்டிங் கருவிகள் போன்ற சார்பு எடிட்டிங் அம்சங்கள் கொண்ட Kinemaster செயலி,LumaFusion என்று ஆப்பிள் ஐபோனிலுமுள்ளது.
இதைப்போன்ற மேலும் பயனுள்ள செய்திகளை பற்றி அறிய அடுத்த பாகங்களை பார்க்கவும். அடுத்த பாகத்தை பார்க்கhttps://tamil.lyfedy.com/tamil/tech-ta/%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%be%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%89%e0%ae%aa%e0%ae%af%e0%af%8b%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-2/. மேலும் இதைப்பற்றி அறிய https://youtu.be/qkb0qJbR3Xk.